2014-01-29 16:05:25

Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அமெரிக்க ஆயர்கள் செல்கின்றனர்


சன.29,2014. வருகிற பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல் 7ம் தேதி முடிய, Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அமெரிக்க ஆயர்கள் செல்கின்றனர் என்று அந்நாட்டு ஆயர் அவை அறிவித்துள்ளது.
அமேரிக்கா ஆயர்கள் பேரவையின் பிரதிநிதிகளும், CRS எனப்படும் கத்தோலிக்கத் துயர்துடைப்பு பணிகள் அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து, அப்பகுதியின் தேவைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ள இப்பயணத்தை மேற்கொள்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதிநிதிகள் குழுவுடன், அமெரிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் பேராயர் Joseph Kurtz அவர்கள் செல்வார் என்றும், அவர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களையும், அங்கு பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்களையும், பிலிப்பின்ஸ் ஆயர்கள் பலரையும் சந்திப்பார் என்றும் பேரவையின் அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க ஆயர்கள் பேரவையும், CRS அமைப்பும் இணைந்து மேற்கொண்ட நிதி திரட்டும் முயற்சியில் இதுவரை 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஆயர்கள் பேரவையின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.