2014-01-25 15:56:23

வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு வணிகத் துறையினர் முக்கிய பங்காற்ற முடியும், பான் கி மூன்


சன.25,2014. உலகில் வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், உலகின் உறுதியான வளர்ச்சிக்கும் வணிகத் துறையினர் முக்கிய பங்காற்ற முடியும் எனக் கூறியுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் இவ்வாறு கூறிய பான் கி மூன், வறட்சியிலிருந்து பசுமைப் பொருளாதாரத்துக்கு உலகினர் செல்வதற்கு கோடிக்கணக்கான டாலர் முதலீடு செய்ய வேண்டியுள்ளது என்று கூறினார்.
வெப்பநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய உள்கட்டமைப்புகள் மற்றும் கார்பன் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முதலீட்டாளர்களும், வங்கிகளும், நிதியமைப்புகளும் தேவைப்படுகின்றனர் என்றும் கூறினார் பான் கி மூன்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.