2014-01-25 15:55:15

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையிலும் சமூகத்திலும் பெண்களுக்கு அதிகப் பங்கு


சன.25,2014. இவ்வுலகின் வேலைக்கும், பொதுத் துறைகளுக்கும் பெண்களின் இருப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்வேளை, அதே அளவு முக்கியத்துவம் குடும்பத்துக்கும் அவசியம் என திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இத்தாலிய மாதர் கழகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட ஏறக்குறைய 300 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், பங்குகளில், சமூகங்களில், குறிப்பாக, நலிந்தவர்க்கும் ஆதரவற்றவர்க்கும் பெண்கள் ஆற்றிவரும் சிறந்த பணிகளைப் பாராட்டினார்.
கிறிஸ்தவர்களுக்கு இல்லத் திருஅவையாக இருக்கும் குடும்பம், திருஅவையின் நலமான வாழ்வுக்கும் வளமைக்கும் இன்றியமையாதது என்றும் உரைத்த திருத்தந்தை, வருங்காலத் தலைமுறைகளுக்கு நன்னெறிக் கோட்பாடுகளையும், விசுவாசத்தையும் வழங்குவதற்கு இல்லத்தில் பெண்களின் இருப்பு இக்காலத்தில் அதிகம் அவசியமாகின்றது என்றும் பேசினார்.
குடும்பத்திலும், பொது வாழ்விலும், பணியிடங்களிலும் பல காரியங்களைப் பகுத்தறிவதற்கு இடைவிடா செபமும், மனஉறுதியும் அவசியம் என்றும், கிறிஸ்தவப் பெண்கள், இறைவார்த்தையால் ஒளிரப்பட்டு, அருளடையாள அருளால் நிரப்பப்பட்டு, இறைவனோடு உரையாடி அவரின் அழைப்புக்குச் செவிசாய்க்க அழைக்கப்படுகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.