2014-01-22 16:20:51

மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கையில் முன்னேற்றம் இல்லை - காமன்வெல்த் அறிக்கை


சன.22,2014. இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் மனித உரிமை நிலவரங்கள் எவ்வகையிலும் முன்னேற்றமடையவில்லை என்று பிரிட்டனின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய (Commonwealth) நாடுகளுக்கான அமைச்சகம் தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளவில் 27 நாடுகளிலுள்ள மனித உரிமைகள் நிலவரம் குறித்து இத்திங்கள் இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் அந்நாடுகளில் மனித உரிமைகள் நிலவரம் எவ்வாறு இருந்த்தென்பதை விவரிக்கிறது.
கொழும்பில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான ஒரு நிகழ்வில் பங்குபெற வடபகுதியைச் சேர்ந்த, காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பு போக முற்பட்ட வேளையில், இராணுவத்தினரால் அவர்கள் தடுக்கப்பட்டனர் என்று கூறும் அவ்வறிக்கை, அந்நிகழ்வில் கலந்துகொண்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் கூறுகிறது.
அதேபோல பொதுநலவாய (Commonwealth) நாடுகளுக்கான மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் அச்சுறுத்துப்பட்டு பவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.