2014-01-22 16:20:22

திருப்பீடத்திற்கான அயர்லாந்து தூதரகம் மீண்டும் துவக்கப்படுவது மகிழ்வுதரும் ஒரு செய்தி - கர்தினால் Seán Brady


சன.22,2014. திருப்பீடத்திற்கான அயர்லாந்து தூதரகம் மீண்டும் துவக்கப்படுவது மகிழ்வுதரும் ஒரு செய்தி என்றும், திருஅவைக்கும் ஒரு நாட்டின் அரசுக்கும் இடையே இருக்கவேண்டிய ஆக்கப்பூர்வமான உறவின் வெளிப்பாடு இதுவென்றும் அயர்லாந்தின் கர்தினால் Seán Brady அவர்கள் கூறினார்.
2011ம் ஆண்டு நவம்பர் மாதம் மூடப்பட்ட திருப்பீடத்திற்கான அயர்லாந்து தூதரகம் மீண்டும் துவக்கப்படும் என்று அயர்லாந்து அயல்நாட்டு உறவுகள் அமைச்சர் TEG இச்செவ்வாயன்று அறிவித்ததைத் தொடர்ந்து, கர்தினால் Seán Brady அவர்கள் இவ்வாறு கூறினார்.
அயர்லாந்து அரசு எடுத்துள்ள இந்த முடிவு குறித்து அயர்லாந்துக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Charles Brown அவர்களும் தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
1929ம் ஆண்டு முதல் அயர்லாந்து நாடும் திருப்பீடமும் தூதரகத் தொடர்புகளைக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.