2014-01-18 15:20:16

திருத்தந்தை பிரான்சிஸ் : தங்களின் குழந்தைப்பருவம் திருடப்பட்ட சிறாரை நினைக்கிறேன்


சன.18,2014. போர்கள் பலரின் வாழ்வைத் தவிடுபொடியாக்கியுள்ளன; தங்களின் குழந்தைப்பருவம் திருடப்பட்ட சிறாரைச் சிறப்பாக நினைக்கிறேன் என்று இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இஞ்ஞாயிறன்று உரோம் நகரின் இயேசுவின் திரு இதய ஆலயப் பங்குக்குச் செல்லவிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரின் முக்கிய இரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள இவ்வாலயப் பங்கில் பல ஆண்டுகளாக, வீடற்ற மக்கள் அடைக்கலம் தேடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இஞ்ஞாயிறு திருப்பயணம் பற்றிப் பேசிய இயேசுவின் திரு இதய ஆலயப் பங்குக்குரு லூயிஜி கிரிகோல்தோ, தற்போது ஏறக்குறைய 400 புலம்பெயர்ந்த மக்கள் இப்பங்கின் ஆதரவுடன் வாழ்ந்து வருகின்றனர் என கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, புலம்பெயர்ந்த மக்கள், இப்பங்கின் இளையோர் மற்றும் தன்னார்வப் பணியாளர்களைச் சந்திப்பார் என அருள்பணி கிரிகோல்தோ மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.