2014-01-18 15:21:35

சத்துள்ள உணவுப்பொருள்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும், ஐ.நா.அதிகாரி


சன.18,2014. மக்கள் நலமாக வாழ்வதற்கு, சத்துள்ள உணவு உற்பத்தி முறைகளைத் தாங்கி நிறுத்தக்கூடிய வழிகள் அவசியம் என்பதை நினைவுபடுத்தியுள்ள அதேவேளை, வேளாண் துறைகளில் பன்மையைப் புகுத்தி, சத்துள்ள உணவுப்பொருள்கள் தயாரிக்கப்படுவதில் கவனம் செலுத்தப்படுமாறு ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உணவு உற்பத்தி குறித்த இந்த உலகினரின் பொதுவான அணுகுமுறை வேளாண் துறையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதோடு மட்டுமல்லாது, 2050ம் ஆண்டுக்குள் 960 கோடி மக்களுக்கு உணவளிக்கவேண்டிய தேவையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவன உதவி இயக்குனர் Helena Semedo கூறினார்.
1945ம் ஆண்டிலிருந்து உலகில் உணவு உற்பத்தி மூன்று மடங்காகியுள்ளது என்றும், ஒரு மனிதருக்குச் சராசரியாக கிடைக்கும் உணவின் அளவு 40 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் Semedo செய்தியாளர்களிடம் கூறினார்.
உணவு உற்பத்தி மிகுந்த அளவில் இருந்தபோதிலும், இன்னும் உலகில் 84 கோடிப் பேர் தினமும் பசியோடு உறங்கச் செல்கின்றனர் என்றும், மேலும், 200 கோடிப் பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் Semedo கூறினார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.