2014-01-15 16:01:10

Haiyan சூறாவளியில் சிக்கிய குழந்தைகள் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வகுப்பறைகளில்


சன.15,2014. பிலிப்பின்ஸ் நாட்டில், Haiyan என்ற கொடும் சூறாவளியில் சிக்கிய San Roque என்ற பகுதியில் குழந்தைகள் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வகுப்பறைகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் அந்நாட்டில் பெருமளவு அழிவுகளை உருவாக்கிய Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்ட 5 இலட்சம் குழந்தைகள் கல்வி கற்பது முக்கியம் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட "Back to School" என்ற திட்டத்தின் கீழ் தற்காலிக வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, தற்போது இயங்க ஆரம்பித்துள்ளன.
வீடுகளை இழந்த நிலையில் முகாம்களில் வாழும் குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தால், அவர்கள் வேறு பல வழிகளில் தங்கள் எதிர்காலத்தை பாழாக்கும் வழிகள் உள்ளன என்பதால், அவர்களுக்கு இந்த ஏற்பாடுகளை பன்னாட்டு பிறரன்பு அமைப்புக்கள் உருவாக்கித் தந்துள்ளன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.