2014-01-14 15:18:17

புனித பூமியில் குடியேற்றதாரர்க்கு நிச்சயமற்ற எதிர்காலத்தைக் காண முடிகின்றது, மேற்குலக ஆயர்கள்


சன.14,2014. புனித பூமியில் குடியேற்றதாரர்க்கு நிச்சயமற்ற எதிர்காலத்தைக் காண முடிகின்றது என, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென்னாப்ரிக்க ஆயர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
புனிதபூமித் தலத்திருஅவைகளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உதவுவதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென்னாப்ரிக்க ஆயர்கள் கூட்டமைப்பு இவ்வாறு கூறியது.
பூனிதபூமியில் திருப்பயணம் மேற்கொண்டுவரும் இந்த ஆயர்கள் கூட்டமைப்பு, காசாவில் திருப்பலி நிறைவேற்றி, இஸ்ரேலின் தெல் அவிவ் நகரிலுள்ள மேற்கத்திய நாடுகளின் அரசுத் தூதர்களையும் சந்தித்துள்ளது.
இஸ்ரேலில் நுழைவதற்கும், அந்நாட்டைவிட்டு வெளியேறுவதற்கும் காசா மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளைத் தாங்கள் அறியவந்ததாகத் தெரிவித்த ஆயர்கள், தெல் அவிவ் போன்ற நவீன நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் ஏழ்மை நிலையைக் காண முடிகின்றது என்றும் கூறினர்.
இவ்வாறு ஏழ்மையான பகுதிகளில் வாழ்வோரில் பெரும்பாலானோர் ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதி, பிலிப்பின்ஸ், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து அடைக்கலம் தேடியவர்கள் என்றும் ஆயர்கள் தெரிவித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.