2014-01-14 15:18:36

எகிப்தில் புதிய அரசியல் அமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்பில் கிறிஸ்தவர்கள் பங்கெடுக்க கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்


சன.14,2014. எகிப்தில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள புதிய அரசியல் அமைப்பு குறித்த பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் அனைத்துக் கிறிஸ்தவர்களும் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.
இந்தப் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் பங்கெடுப்பது, அனைத்துக் கிறிஸ்தவர்களின் கடமையும் பொறுப்பும் என்று, அந்நாட்டின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர் முதுபெரும் தந்தை 2ம் Tawadros அச்சபையின் கிறிஸ்மஸ் விழாத் திருப்பலியின்போதே கூறியுள்ளார்.
மேலும், எகிப்தில் இச்செவ்வாய், இப்புதன் தினங்களில் இடம்பெறும் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்புக்கென, ஏற்கனவே பணியிலுள்ள பாதுகாப்புப் படையினர், அவசரகாலப் படைப்பிரிவினர் தவிர, மேலும் 2 இலட்சம் காவல்துறையினரையும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தியுள்ளது அந்நாட்டு உள்துறை அமைச்சகம்.
ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.