2014-01-11 15:19:43

புனிதரும் மனிதரே - புனித சிம்போரியன்


கி.பி. முதல் நூற்றாண்டு. கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்ட காலம் அது. இந்த வேட்டையில் சிக்கிய ஓர் இளையவர் பெயர் சிம்போரியன். இந்த இளைஞன், இயேசுவை மறுத்துவிட்டு, உரோமையக் கடவுள்களை வணங்குமாறு நீதிபதி கட்டளையிட்டார். இளைஞன் மறுக்கவே, ஊருக்கு நடுவே, தலை துண்டிக்கப்பட்டு அவர் கொல்லப்பட வேண்டுமேன்று நீதிபதி கட்டளையிட்டார்.
உரோமைய வீரர்கள் அவரை ஊருக்கு நடுவே இழுத்துச் செல்லும் வழியில், "என் மகனே" என்ற அலறல் எழுந்தது. சிம்போரியனின் தாய் கூட்டத்தில் நின்று கத்தினார். தாயின் அழுகுரலுக்குச் செவிசாய்த்து இளைஞன் இயேசுவை மறுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் வீரர்கள் நின்றனர். அந்தத் தாய் உரத்தக் குரலில்: "என் அருமை மகனே, வாழும் கடவுளை நினைவில் கொள். இந்த வீரர்களைக் கண்டு அஞ்சாதே. இவர்களால் உன் உயிரைப் பறிக்கமுடியாது. நிலையான வாழ்வுக்கு உன்னை அனுப்பிவைக்க மட்டுமே இவர்களால் முடியும். துணிந்துசெல்" என்று கூறினார். துணிவும், நம்பிக்கையும் நிறைந்த ஓர் அன்னையால் வளர்க்கப்பட்ட சிம்போரியன், துணிவோடு தன் மரணத்தை எதிர்கொண்டார். தாயைப்போலப் பிள்ளை!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.