2014-01-11 15:38:50

தென் சூடானின் அமைதிக்கு ஆயரின் பத்து பரிந்துரைகள்


சன.11,2014. தென் சூடானின் நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டு வரும்வேளை, அந்நாட்டில் உறுதியைன நிலையைக் கொண்டுவருவதற்குப் பத்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
உரையாடல் ஒன்றே நாட்டில் அமைதியை முன்னோக்கி நடத்திச்செல்லும் என்பதை நாட்டின் வரலாற்றின்மூலம் அறிந்துள்ளோம் என்றுரைத்த Tombura-Yambio ஆயர் Barani Eduardo Hiiboro Kussala, தேசப்பற்று, பழிவாங்குதலிலிருந்து வெளிப்படக் கூடாது என்று கூறியுள்ளார்.
மேற்கு பூமத்தியரேகை மாநிலத்திலுள்ள இம்மறைமாவட்ட ஆயர் Kussala, தனது குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலை விசுவாசிகளுடன் மூன்றுநாள் கலந்துரையாடல் கூட்டம் நடத்திய பின்னர் இப்பரிந்துரைகளை நாட்டினருக்கு முன்வைத்துள்ளார்.
தென் சூடான் 2011ம் ஆண்டு சூடானிலிருந்து தனி நாடாகப் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.