2014-01-09 15:52:05

கானா நாட்டில் நிலவும் ஊழலை வேரோடு ஒழிக்க இன்னும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், ஆயர் Michael Osei Bonsu


சன.09,2014. கானா நாட்டில் நிலவும் ஊழலை வேரோடு ஒழிக்க இன்னும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கானா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர், ஆயர் Michael Osei Bonsu அவர்கள் கூறினார்.
கானா அரசுத் தலைவர் John Dramani Mahama அவர்கள் நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்வதாக இச்செவ்வாயன்று அளித்த பேட்டியையடுத்து, ஆயர் Bonsu அவர்கள், Eye Witness News என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
ஊழல் என்று குறிப்பிடுவது அரசியலில் மட்டும் காணப்படும் ஒரு போக்கு அல்ல என்பதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Bonsu அவர்கள், நீதித் துறை, வர்த்தகம், திருஅவை என்ற பல்வேறு தலங்களிலும் நிலவும் ஊழலைக் களைய அனைவரும் இணைந்து செயலாற்றவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.