2014-01-08 15:36:21

தங்கள் எதிர்காலத்தை இழந்துவரும் சிரியாவின் குழந்தைகளைக் காப்பதற்கு 100 கோடி டாலர் நிதி உதவி தேவை - ஐ.நா. நிறுவனம்


சன.08,2014. சிரியாவின் உள்நாட்டுப் போரினால் தங்கள் எதிர்காலத்தை இழந்துவரும் பல இலட்சம் குழந்தைகளைக் காப்பதற்கு 100 கோடி டாலர் நிதி உதவி தேவை என்று ஐ.நா. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
சிரியாவுக்குத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளைப் பற்றி கலந்து ஆலோசிக்க, இன்னும் ஒரு வாரத்தில் குவைத்தில் கூடவிருக்கும் பன்னாட்டு கூட்டத்திற்கு முன்பாக, இந்தக் குழந்தைகளைக் குறித்து, ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அவையின் உயர் அதிகாரி António Guterres அவர்கள் இந்த விண்ணப்பத்தை இச்செவ்வாயன்று வெளியிட்டார்.
உடல்நலம், கல்வி என்ற உரிமைகளை இழந்து, பல்வேறு வன்முறைகளுக்குப் பலியாகிவரும் 40 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை முற்றிலும் இழக்கும் ஆபத்தில் உள்ளனர் என்று Guterres அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.