2014-01-08 15:34:30

எகிப்து அரசுத்தலைவர், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலைவரைச் சந்தித்து, கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்கள்


சன.08,2014. சனவரி 7, இச்செவ்வாயன்று எகிப்தில் கொண்டாடப்பட்ட காப்டிக் வழிபாட்டு முறை கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு, சனவரி 5, கடந்த ஞாயிறன்று, எகிப்து அரசுத்தலைவர், Adly Mansour அவர்கள், Abasseya பேராலயத்திற்குச் சென்று, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலைவர் இரண்டாம் Tawadros அவர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார்.
முன்னாள் எகிப்து அரசுத்தலைவராக இருந்த Gamal Abdel Nasser அவர்கள் 1960ம் ஆண்டு, Abasseya பேராலயத்திற்குச் சென்றதற்குப் பிறகு, தற்போதைய அரசுத்தலைவர் அங்கு சென்றது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று ஊடகங்கள் கணித்துள்ளன.
மேலும், எகிப்து நாட்டின் காப்டிக் வழிபாட்டு முறை கிறிஸ்தவர்கள் சனவரி 7, இச்செவ்வாயன்று காவல்துறையினரின் பலத்த கண்காணிப்புடன் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடினர் என்று கிறிஸ்தவச் செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் எகிப்தில் உள்ள 48 கிறிஸ்தவ கோவில்கள் அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்ததென்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / AsiaNews








All the contents on this site are copyrighted ©.