2014-01-07 15:14:13

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி : தனிமையில் இருப்போருக்காக நம் உணவு மேஜைகளில் ஓர் இடம் ஒதுக்குவோம்


சன.07,2014. நம் உணவு மேஜைகளில் ஓர் இடம் ஒதுக்குவோம். அடிப்படை வசதிகளின்றியும், தனிமையிலும் இருப்போருக்காக அந்த இடம் இருக்கட்டும் என்ற செய்தியை இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்ற உலக இளையோர் தின நிகழ்வுகளையொட்டி, அந்நகர் உயர்மறைமாவட்டத்துக்கு ஏற்பட்டுள்ள கடனைக் கட்டுவதற்கு உதவியாக, ஏறக்குறைய 50 இலட்சம் டாலர் நிதியுதவி செய்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதியளித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 23 முதல் 28 வரை நடைபெற்ற உலக இளையோர் தின நிகழ்வுகளுக்கு 3 கோடியே 84 இலட்சம் டாலர் கடன் ஏற்பட்டுள்ளது என Ernst & Young நிறுவனம் நடத்திய தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.
இக்கடனைத் திருப்பிக் கட்டுவதற்கென கடந்த அக்டோபர் முதல் டிசம்பர்வரை நடத்தப்பட்ட பொது நடவடிக்கைகளில் 3 இலட்சத்து 36 ஆயிரத்து 600 டாலர் திரட்டப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இக்கடனைத் திருப்பிக் கட்டுவதற்கென நிதியுதவி செய்வதற்கு உறுதியளித்துள்ளார் என அவ்விளையோர் தின தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.