2014-01-07 15:15:01

அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல பகுதிகளில் கடும் உறைபனி


சன.07,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடுங்குளிர் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பரவிக்கொண்டிருக்கிறது.
நியுயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களும் இந்த ஆர்க்டிக் குளிர் காற்றால் உறைந்துள்ளன.
வெப்பநிலை வேகமாகக் குறைந்துவரும் நிலையில், நியுயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரூ குவொமோ சில பெரிய நெடுஞ்சாலைகள் மூடப்படும் என்று கூறியுள்ளார்.
கடுமையான வானிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான விமானப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பல இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இத்திங்கள்கிழமை, மின்னெசோட்டா மாநிலத்தில் பாபிட் நகரில் மிகக் குளிரான வெப்பநிலை நிலவியது (-38 டிகிரி செல்சியஸ்) .
குளிரான காற்று , ஏற்கனவே நிலவும் கடுங்குளிரை மேலும் குளிராக இருப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.