2014-01-03 15:20:45

உலக அமைதிக்கு அமெரிக்க ஐக்கிய நாடே முதன்மை அச்சுறுத்தல், புதிய ஆய்வு


சன.03,2014. உலக அமைதிக்கு அமெரிக்க ஐக்கிய நாடே முக்கிய அச்சுறுத்தலாக உள்ளதாக, 68 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு எதிரான நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் தோழமை நாடுகளான துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டின் இறுதியில், உலகளாவிய சுதந்திர வலையமைப்பும் Gallup நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், உலக காவல்துறை ஆளாக அமெரிக்கா நடந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இரண்டாவது நாடாக பாகிஸ்தானும், மூன்றாவது நாடாக சீனாவும், இவற்றையடுத்து, ஆப்கானிஸ்தான், ஈரான், இஸ்ரேல், வடகொரியா என நாடுகள் இந்த ஆய்வில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆதாரம் : AFP







All the contents on this site are copyrighted ©.