2014-01-02 15:08:24

புனிதரும் மனிதரே : புனித Genevieve(422 – 512)


கி.பி. 451ம் ஆண்டில் அத்தில்லா என்பவர் தலைமையிலான காட்டுமிராண்டிக் கும்பல் பிரான்சின் பாரிஸ் நகரை தாக்கவந்தபோது அந்நகர மக்கள் பயந்து நடுங்கி நகரைவிட்டு வெளியேறுவதற்குத் தயாராயினர். ஆனால் புனித Genevieve கடும் உண்ணா நோன்பும், தபமும், இடைவிடா தொடர் செபமும் செய்து பாரிஸ் நகரை இறைவன் காப்பாற்றுவார் என உறுதியளித்து மக்கள் நகரைவிட்டு வெளியேற வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். அக்கும்பலும் பாரிசைத் தாக்கும் திட்டத்தைக் கைவிட்டது. மக்களும் நிம்மதி அடைந்தனர். மேலும், 464ம் ஆண்டில் முதலாம் Childeric என்பவர் பாரிஸ் நகரைக் கைப்பற்றியபோது, அந்நகரத்தினருக்கும், Childeric ஆள்களுக்கும் இடையே இடைநிலையாளராகச் செயல்பட்டு Childeric கைதுசெய்தவர்கள் விடுதலையடைய உதவியவர் புனித Genevieve. இந்த ஆக்ரமிப்பின்போது பசியால் வாட்டிய மக்களுக்குப் படகில் உணவு எடுத்துச் சென்று மக்களுக்கு இவர் உணவளித்தவர். இதனால் புனித Genevieve பாரிஸ் நகரப் பாதுகாவலராக இன்றும் போற்றப்படுகிறார். கி.பி. 512ம் ஆண்டு சனவரி 3ம் தேதி இப்புனிதர் இறந்தார். 1129ம் ஆண்டில் பாரிஸ் நகரை “எரியும் நோய்” என்ற கொள்ளைநோய்த் தாக்கியபோது புனித Genevieveவின் புனிதப் பொருள்கள் பாரிஸ் நகரமெங்கும் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டன. மக்கள் நோயினின்று காப்பாற்றப்பட்டனர். இப்புனிதர் தேவையில் இருப்பவர்களுக்கு எப்பொழுதும் மிகத் தாராளமாக உதவி வந்தார். அதனால் இப்புனிதருக்கு, ரொட்டித்துண்டு அடையாளமாக காட்டப்படுகிறது. இறைக்காட்சிகளையும் இறைவாக்குகளையும் வரமாகப் பெற்று அவை பற்றி மக்களுக்கு இவர் சொல்லி வந்தார். பகைவர்கள் தன்னை நெருப்பு ஏரியில் மூழ்கடிக்கப் போகிறார்கள் என்றறிந்த பின்னர் இறைக்காட்சிகளைப் பொதுப்படையாகச் சொல்வதைத் தவிர்த்து வந்தார் புனித Genevieve.

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.