2013-12-28 15:36:23

சீனாவில் ஒரு குழந்தைத் திட்டம் தளர்த்தப்படுகிறது


டிச.28,2013. சீனாவில் அமலில் இருந்த “ஒரு குழந்தைக் கொள்கை” என்ற கடுமையான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தளர்த்துவதற்கான சட்டம் ஒன்று இச்சனிக்கிழமையன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வெளியிட்டுள்ள Xinhua என்ற சீனாவின் அரசு செய்தி நிறுவனம், ஒரு குழந்தை உள்ள தம்பதியினர் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சீனாவின் தேசிய மக்கள் கட்சியின் நிலைக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள மக்கள்தொகை விகிதத்தைக் கருத்தில்கொண்டு குடும்பக் கட்டுப்பாடு விதிகளைத் தளர்த்த வேண்டும் அல்லது ஒரு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் மக்கள்தொகை வெகு வேகமாகப் பரவி வந்ததைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 1970களின் இறுதியில் ஒரு குழந்தைக் கொள்கை என்ற கடுமையான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டுவந்தது அந்நாட்டு அரசு.
2050ம் ஆண்டுக்குள் சீனாவின் மக்கள்தொகையில் 25 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் 65 வயதுக்கு மேற்பட்டவராய் இருப்பார்கள்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.