2013-12-27 16:21:19

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், புனித மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மதிய உணவு


டிச.27,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் இவ்வெள்ளியன்று மதிய உணவு அருந்தினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தங்கியிருக்கும் இல்லத்துக்கு அண்மையில் சென்று கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, புனித மார்த்தா இல்லத்தில் மதிய உணவு அருந்த அழைப்புவிடுத்திருந்தார். அதை முன்னிட்டு இவ்வெள்ளியன்று புனித மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மதிய உணவு அருந்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவர்களுடன் இவ்விருவரின் செயலர்களும், நாடுகளுக்கிடையேயான உறவுகளின் பொதுச்செயலர் பேராயர் தோமினிக் மம்பர்த்தி, இன்னும், திருப்பீடச் செயலகத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான பேரருள்திரு Bryan Wells ஆகியோரும் மதிய உணவருந்தினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.