2013-12-27 16:22:54

தென் சூடான் குறித்த எட்டு கிழக்கு ஆப்ரிக்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம்


டிச.27,2013. தென் சூடானில் இடம்பெற்றுவரும் கலவரங்களால் ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதையடுத்து, எட்டு கிழக்கு ஆப்ரிக்கத் தலைவர்கள், தென் சூடான் குறித்த அவசரக் கூட்டம் ஒன்றை இவ்வெள்ளியன்று கென்யாவில் நடத்தினர்.
மேலும், இன்னும் 24 மணிநேரத்துக்குள் ஐ.நா.அமைதி காக்கும் படையினரைத் தென் சூடானில் நிறுத்துவதற்கு ஐ.நா. திட்டமிட்டுள்ளது.
13 நாள்களுக்கு முன்னர் தென் சூடானில் வெடித்த வன்முறையில், ஐ.நா.அமைதி காக்கும் படையில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிமக்கள் அந்நாட்டின் ஐ.நா. வளாகங்களில் அடைக்கலம் தேடியுள்ளனர்.
உலகின் புதிய நாடாகிய தென் சூடானில் 12,500 ஐ.நா. அமைதிப் படைவீரர்களை நிறுத்துவதற்கு ஐ.நா.பாதுகாப்பு அவை இசைவு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.