திருத்தந்தையின் Twitter செய்தி : நம் இதயங்களில் நற்செய்தியின் மகிழ்வு எப்போதும் இருப்பதாக
டிச.27,2013. நம் இதயங்களில் நற்செய்தியின் மகிழ்வு எப்பொழுதும், சிறப்பாக, இக்கிறிஸ்மஸ்
காலத்தில் இருப்பதாக என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று
வெளியிட்டுள்ளார். மேலும், இவ்வாண்டின் நிறைவு நாளான வருகிற செவ்வாய் மாலை 5 மணிக்கு
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் Te Deum நன்றி வழிபாடு நடத்துவார் திருத்தந்தை
பிரான்சிஸ். அவ்வழிபாட்டுக்குப் பின்னர், வத்திக்கான் தூய பேதுரு வளாகம் வந்து அங்கு
அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடிலின் முன்பாகச் செபிப்பார். உலக அமைதி தினமாக, கத்தோலிக்கர்
சிறப்பிக்கும் சனவரி முதல் தேதியன்று காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில்
திருப்பலி நிகழ்த்தி உலக அமைதிக்காகச் செபிப்பார் திருத்தந்தை. திருக்காட்சி பெருவிழாவான
சனவரி 6ம் தேதி காலையில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார்
திருத்தந்தை பிரான்சிஸ்.