2013-12-26 15:42:14

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதியில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடிய பிலிப்பின்ஸ் நாட்டின் திருப்பீடத் தூதர்


டிச.26,2013. நவம்பர் மாதத் துவக்கத்தில் பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய பெரும் Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்ட Leyte பகுதியில் அந்நாட்டின் திருப்பீடத் தூதர் பேராயர் Giuseppe Pinto அவர்கள் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடினார்.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒன்றிணைவதை விரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக தான் அப்பகுதிக்கு வந்துள்ளதாக பேராயர் Pinto அவர்கள் கூறினார்.
திருத்தந்தையும், கத்தோலிக்கத் திருஅவை என்ற குடும்பமும் எங்களைத் தனியே தவிக்க விட்டுவிடவில்லை என்பதை பேராயர் Pinto அவர்களின் வருகை உணர்த்தியது என்று Palo உயர் மறைமாவட்டத்தின் சார்பாகப் பேசிய அருள் பணி Amadeo Alvero அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.
நவம்பர் 8ம் தேதி பிலிப்பின்ஸ் நாட்டின் Leyte பகுதியைத் தாக்கிய Haiyan சூறாவளியில் இறந்தோரின் எண்ணிக்கை 6000க்கும் அதிகம் என்றும், தங்கள் உடமைகளை இழந்தோரின் எண்ணிக்கை 40 இலட்சத்திற்கும் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.