புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் கடின உழைப்பால் உலக நாடுகள் வளமடைந்து வருகின்றன
- ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்
டிச.19,2013. புலம்பெயர்ந்து செல்லும் பல கோடி மக்களின் துணிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு
ஆகியவற்றால உலக நாடுகள் வளமடைந்து வருகின்றன என்பதை நாம் மறுக்கமுடியாது என்று ஐ.நா.
அவையின் பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார். டிசம்பர் 18, இப்புதனன்று
சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக புலம்பெயர்ந்தோர் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி
மூன் அவர்கள், புலம்பெயர்தல் என்பது 21ம் நூற்றாண்டின் இன்றியமையாத வரலாறாக மாறிவருகிறது
என்று கூறினார். புலம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படும் மக்களில் 40 விழுக்காட்டினர்
வளரும் நாடுகளிலிருந்து வருபவர்கள் என்றும், இவர்களில், 10ல் ஒருவர் 15 வயதுக்கும் உட்பட்ட
இளம் வயதினர் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தங்கள்
மாண்பையும், உடல் நலத்தையும் காப்பாற்ற முடியாத நிலைக்கு புலம் பெயர்ந்தோரை உள்ளாக்குவது
குற்றம் என்பதை அனைத்து நாடுகளும் விரைவில் உணரவேண்டும் என்று பான் கி மூன் அவர்கள் தன்
செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.