2013-12-19 17:26:06

San Lorenzo de Almagro அர்ஜென்டீனா கால்பந்தாட்டக் குழுவினருடன் திருத்தந்தை சந்திப்பு


டிச.19,2013. டிசம்பர் 18, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கியபின்னர், அர்ஜென்டீனா நாட்டிலிருந்து வந்திருந்த “San Lorenzo de Almagro” கால்பந்தாட்டக் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
தன் இளவயது முதல் திருத்தந்தை அவர்கள் ஆர்வம் கொண்டிருந்த இந்தக் கால்பந்தாட்டக் குழுவினர், அண்மையில் அர்ஜென்டினாவின் முதன்மை அணி என்ற கோப்பையை முதன்முறையாக வென்றுள்ளனர்.
தாங்கள் வேற கோப்பையின் ஒரு நகலை இக்குழுவினர் இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பிறந்தநாள் பரிசாக வழங்கினர்.
டிசம்பர் 15, கடந்த ஞாயிறன்று San Lorenzo குழுவினர் இக்கொப்பையைக் கைப்பற்றியதும், அதனை திருத்தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அர்ப்பணிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தனர்.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.