2013-12-18 15:58:00

கேரளாவின் கர்தினால்கள் சோனியா காந்தியுடன் சந்திப்பு


டிச.18,2013. கேரளாவின் சீரோ மலபார் தலைமைப் பேராயர், கர்தினால் George Alencherry, சீரோ மலங்கரா தலைமைப் பேராயர் Baselios Cleemis, திருவனந்தபுரம் பேராயர் சூசை பாக்கியம் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்று புது டில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர், சோனியா காந்தி அவர்களை இச்செவ்வாயன்று சந்தித்தது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைகளில் பசுமை முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரு திட்டத்தின் மூலம் 123 கிராமங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவர் என்ற தங்கள் கவலையை இக்குழுவினர் இச்சந்திப்பின்போது தெரிவித்தனர்.
பசுமை முயற்சிகள் தேவை என்றாலும், அவை பல்லாயிரம் ஏழை மக்களை அப்புறப்படுத்தும் முயற்சியாக மாறக்கூடாது என்ற விண்ணப்பத்தை இக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.
பசுமை திட்டத்தால் இக்கிராம மக்கள் அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் என்ற வாக்குறுதி இந்தச் சந்திப்பின் இறுதியில் வழங்கப்பட்டதென இந்திய ஆயர்கள் பேரவை செயலர் அருள் பணி ஜோசப் சின்னய்யன் அவர்கள், UCAN செய்தியிடம் கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.