2013-12-12 16:34:32

130 நாடுகளில் பயணித்த புனித தொன் போஸ்கோ அவர்களின் புனிதப் பொருள் பேழை, மீண்டும் இத்தாலியை வந்தடைகிறது


டிச.12,2013. உலகின் ஐந்து கண்டங்களில் உள்ள 130 நாடுகளில் மக்கள் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்ட புனித தொன் போஸ்கோ அவர்களின் புனிதப் பொருள்கள் அடங்கிய பேழை, டிசம்பர் 13, இவ்வேள்ளியன்று மீண்டும் இத்தாலியை வந்தடைகிறது.
சலேசிய துறவு சபை துவக்கப்பட்ட 150ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக, புனித தொன் போஸ்கோ அவர்களின் புனிதப் பொருள்கள் அடங்கிய பேழை ஒன்று 2009ம் ஆண்டு Turin நகரில் உள்ள சகாய அன்னை மரியா பசிலிக்காவிலிருந்து தன் திருப்பயணத்தை மேற்கொண்டது.
டிசம்பர் 13ம் தேதி மீண்டும் இத்தாலியை அடையும் இப்பேழை, இத்தாலியின் பல நகரங்களில் பயணம் மேற்கொண்டு, 2014ம் ஆண்டு சனவரி 31ம் தேதி மீண்டும் Turin நகரில் உள்ள அன்னை மரியா பசிலிக்கா சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித தொன் போஸ்கோ அவர்கள் பிறந்ததன் 2ம் நூற்றாண்டு 2015ம் ஆண்டு கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.