2013-12-10 14:55:46

பிலிப்பீன்சில் மனித வியாபாரத்துக்கெதிரான செப நாள்


டிச.10,2013. பிலிப்பீன்சில் மனித வியாபாரத்தையும், நவீன அடிமைத்தனத்தையும் ஒழிக்கும் நோக்கத்தில், இக்கருத்துக்கான செப நாளை வருகிற வியாழனன்று அந்நாட்டின் கத்தோலிக்கரும் பிரிந்த கிறிஸ்தவ சபையினரும் கடைப்பிடிக்கவுள்ளனர்.
பிலிப்பீன்சில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசுத்தலைவர் பதவிப்பிரமாணம் எடுக்கும் மனிலாவின் Quirino Grandstand என்ற இடத்தில் இம்மாதம் 12ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இச்செப வழிபாடு இடம்பெறவுள்ளது.
மனித வியாபாரத்துக்கு எதிரான தெளிவான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், அதற்குப் பலியாகுவோரைப் பாதுகாக்கவும் தெளிவான பரிந்துரைகளை அரசுக்கு முன்வைப்பதற்குத் திட்டமிட்டு வருகின்றனர் பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.
பிலிப்பீன்சை அண்மையில் தாக்கிய ஹையான் கடும் புயல் மற்றும் கடும் வெள்ளத்தால் அந்நாட்டில் நவீன அடிமைத்தனம் அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.