2013-12-09 16:45:11

அமல உற்பவ அன்னையிடம் திருத்தந்தை செபம்


டிச.,09,2013. அமல உற்பவ அன்னை திருவிழாவை முன்னிட்டு இஞ்ஞாயிறு மாலை உரோம் நகரின் Piazza di Spagnaவிலுள்ள மரியன்னை திருஉருவத்துக்கு ரோஜாமலர்களை கண்ணிக்கையாக வைத்ததுடன், மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்திற்கும் சென்று தரிசித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Piazza di Spagna மரியன்னை சதுக்கத்தில் குழுமியிருந்த மக்களுடன் இணைந்து செபித்து வழங்கிய உரையில், ஏழைகள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் மீதான அக்கறையை வெளிப்படுத்தினார் திருத்தந்தை.
அமல உற்பவ அன்னைமரி நோக்கிய தனி செபத்தில், ' புனிதத்துவத்திற்கான ஆவல்', 'உண்மையின் ஒளி', 'அன்பின் பாடல்' ,'நற்செய்தியின் அழகு' ' ஏழைகளின் கூக்குரல்' ' நோயாளிகளின் துன்பம்' 'முதியோரின் தனிமை, குழந்தைகளின் பாதுகாப்பு' போன்றவைகளை வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையாகப் பதவியேற்றபின் முதன்முறையாக Piazza di Spagnaவிற்கு அமலஉற்பவ அன்னை விழாவை சிறப்பிக்கச்சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், அதன்பின் மேரிமேஜர் பசிலிக்காவிற்கும் சென்று அன்னையிடம் செபித்து வத்திக்கான் திரும்பினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.