2013-12-07 15:41:49

உலகில் முதல் சுற்றுச்சூழல் சுரங்கப்பாதை


டிச.07,2013. உலகில் முதன்முறையாக சுற்றுச்சூழல் நட்பாக இருக்கும் சுரங்கப்பாதை ஒன்று பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் லியோன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரமாண்டமான சுரங்கப்பாதை, நடைபயணிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பாதையில் பேருந்துகளும் விடப்பட வேண்டும் என்பதற்காக நான்கு மின்சாரப் பேருந்துகள் சோதனை ஓட்டத்திற்காக விடப்பட்டுள்ளன.
இச்சுரங்கபாதையில் இசை வேலைபாடுகளை சேர்க்டன் என்ற நிறுவனம் செய்துள்ளது. தீபவிழாவாகக் காட்சியளிக்கும் இச்சுரங்கப்பாதை காலை 5 மணி முதல் இரவு 12.30 மணிவரைத் திறக்கப்பட்டிருக்கும்.
இது 28 கோடியே 28 இலட்சம் யூரோக்கள் செலவில் வின்சி கட்டுமானத்தால் மேற்பார்வையிடப்பட்டுள்ளது.
இச்சுரங்கப்பாதை குறித்து நிருபர்களிடம் பேசிய லியோன் நகர மேயர், சுற்றுச் சூழலிற்கு நண்பனாக அமைய வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : தமிழ்வின்







All the contents on this site are copyrighted ©.