2013-12-05 16:44:12

முதுமை மூளைநோய் அதிகரிப்பதாக எச்சரிக்கை


டிச.,05,2013. முதுமையில் ஏற்படும் டிமென்ஷியா எனும் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உலகில் அதிகரித்துவருவதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 2050ம் ஆண்டில், தற்போதைய எண்ணிக்கையைவிட மும்மடங்கு அதிகரிக்கும் என, இந்நோய் குறித்து ஆய்வுச் செய்துவரும் பன்னாட்டு அறக்கட்டளை தெரிவிக்கிறது.
டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை 13 கோடியைத்தாண்டும் என்று 'அல்ஷைமர்ஸ் டிசீஸ் இண்டர்நேஷனல்' என்ற அறக்கட்டளையின் ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.
ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகள், குறிப்பாக, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்களின் ஆயுள்காலம் அதிகரிப்பதே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.