2013-11-29 15:20:30

ஊட்டச்சத்துப் பற்றாக்குறைச் சிறாருக்குச் சிகிச்சை வழங்குவது குறித்த ஐ.நா.வின் புதிய வழிகாட்டிகள்


நவ.29,2013. உலகில் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 2 கோடிச் சிறாருக்குச் சிகிச்சை வழங்குவது குறித்த புதிய நடைமுறை வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம்.
இச்சிறார்க்கு வீடுகளிலே சிகிச்சை அளிக்க அனுமதிப்பது, இவர்களில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது உட்பட கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் துன்புறும் சிறாருக்கு சிகிச்சை வழங்குவது குறித்த புதிய நடைமுறைவிதிகளை வெளியிட்டுள்ளது உலக நலவாழ்வு நிறுவனம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறத் தேவையில்லாத இச்சிறாருக்கு வீடுகளிலேயே சிகிச்சை வழங்கப்படுவதற்கான வழிகாட்டிகளையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.