2013-11-28 15:47:59

இலங்கையில் போர்க்கால இழப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் ஆரம்பம்


நவ.,28, 2013. இலங்கையில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்த போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள், உடமைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஆகியவை குறித்த ஒரு கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, புள்ளிவிவரங்கள் ஆகிய இரண்டு துறைகளும் இணைந்து நாடு தழுவிய அளவில் இந்தக் கணக்கெடுப்பை இவ்வியாழன் முதல் தொடங்கியுள்ளன.
அந்த நாடு தழுவியத் திட்டத்தில், தொழில்முறை ரீதியில், பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களையும் உள்ளடக்கும் வகையில், நாடு முழுவதும் ஒரு கணக்கெடுப்பு நடத்தி, மோதல்கள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள், சொத்துக்கள் சேதம் ஆகியவை குறித்து நேரடியாகத் தகவல்களைச் சேகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இடம்பெறவுள்ள இந்தக் கணக்கெடுப்பு 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மோதல்கள் காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புகள், சொத்துக்களுக்கான சேதங்கள் ஆகியவை குறித்த விபரங்களைச் சேகரிக்கவுள்ளதாக அரசின் அறிக்கை கூறுகிறது.
போரின் காரணமாக ஏறத்தாழ90,000 பேர் கைம்பெண்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.