2013-11-27 16:17:31

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் கடும் மனித உரிமை மீறல்கள், ஐ.நா. எச்சரிக்கை


நவ.27,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் முடியாட்சிக்குரிய நடவடிக்கைகள் அதிகரித்துவரும்வேளை, அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு ஆப்ரிக்க ஒன்றியம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அனைத்துலக சமுதாயம் ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஐ.நா.வின் அமைதி காக்கும் படைகள் அமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் பேசிய ஐ.நா. உதவிப் பொதுச்செயலர் யான் எலயாசன், அந்நாட்டின் அரசுத்தலைவரை, பரட்சிக்குழுக்கள் ஆட்சியிலிருந்து வெளியேற்றிய கடந்த மார்ச் மாதத்திலிருந்து அந்நாடு கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது என்றும் கூறினார்.
கொலைகள், சித்ரவதைகள், பாலியல் வன்செயல்கள், சிறாரைப் படைக்குக் கடத்துவது உட்பட அந்நாடு கடும் மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டு வருவதாகவும் எலயாசன் கூறினார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் 46 இலட்சம் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடும் உணவு மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறை, இன்னும் நலவாழ்வுப் பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் எலயாசன் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.