2013-11-22 16:07:04

திருஅவையின் சமூகக் கோட்பாட்டு விழாவுக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி


நவ.22,2013. திருஅவையின் சமூகக் கோட்பாடு குறித்த தேசிய விழாவுக்கு ஒலி-ஒளிச் செய்தி ஒன்றை இவ்வியாழன் இரவு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் வெரோனா நகரில் இடம்பெறும் திருஅவையின் சமூகக் கோட்பாடு குறித்த 3வது தேசிய விழாவுக்குத் திருத்தந்தை வழங்கிய செய்தியில், பொருளாதார வளர்ச்சிக்கு முதியோரும் இளையோரும் நேரடியாகத் தங்கள் பங்களிப்பை வழங்காவிட்டாலும் சமூகத்தின் நல்வாழ்வுக்கு இவர்களே மையமாக உள்ளனர் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.
சில நாடுகளில் இளையோர்வேலைவாய்ப்பின்மை 40 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளதாகவும், இளையோரின் சக்தியையும், முதியோரின் ஞானத்தையும் மதிக்கும் வழிகளை நாம் கண்டறியாவிட்டால் வருங்கால சமுதாயம் ஆபத்தை எதிர்நோக்கும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், நலிந்தவர்கள் போன்றோடு ஒருமைப்பாட்டுணர்வு கொள்வது, இலாபத்தை மையமாகக்கொண்ட இவ்வுலகின் சூளுரையாக அமைய வேண்டுமென்றும், இந்த ஒருமைப்பாட்டுணர்வு, திருஅவையின் சமூகப் போதனைகளின் மையம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குறைந்த சமத்துவமின்மை, அதிகப் புறக்கணிப்பு என்ற தலைப்பில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இந்த விழா வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.