2013-11-22 16:10:50

உலகின் வெப்பநிலை மாற்றம் முன்வைக்கும் அறநெறி சார்ந்த பிரச்சனைகள் களையப்பட அழைப்பு, பேராயர் மிலியோரே


நவ.22,2013. உலகின் வெப்பநிலை மாற்றம் முன்வைக்கும் அறநெறி சார்ந்த பிரச்சனைகள் களையப்பட நடவடிக்கை எடுக்கப்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார் திருப்பீட உயர்மட்ட அதிகாரி ஒருவர்.
போலந்து நாட்டுத் தலைநகர் வார்சாவில் வெப்பநிலை மாற்றம் குறித்து ஐ.நா. உலக மாநாட்டை நடத்திய அதேநேரம் திருஅவை நடத்திய கருத்தரங்கில் பேசிய பேராயர் செலஸ்தினோ மிலியோரே, வெப்பநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் மனசாட்சியையும், ஒழுக்கநெறிக்கூறுகளையும் நெறிப்படுப்படுத்த வத்திக்கான் உதவும் எனத் தெரிவித்தார்.
வார்சாவில் இம்மாதம் 11ம் தேதி தொடங்கிய வெப்பநிலை மாற்றம் குறித்த உலக மாநாடு இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது. கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை 2020ம் ஆண்டுக்குள் 18 விழுக்காடாகக் குறைப்பதற்கு இவ்வுலக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 190க்கும் மேற்பட்ட அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.