2013-11-22 16:12:15

உலக மெய்யியல் நாள், நவம்பர் 21


நவ.22,2013. நமக்கிடையே காணப்படும் சவால்களுக்குப் பொதுவான தீர்வுகளைக் கண்டுகொள்வதற்கு உதவும் வகையில் அனைத்துலக சமுதாயம் பகுத்தறிவு வாதங்களை மேற்கொள்ள வேண்டுமென உலக மெய்யியல் நாளுக்கான செய்தியில் யுனெஸ்கோ நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது.
உலக மெய்யியல் நாள், நவம்பர் 21, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவனம், அனைத்து அறிவாளிகளும் தர்க்கரீதியான சிந்தனைகளின் வல்லமையை வெளிப்படுத்துமாறு கேட்டுள்ளது.
சமூகத்தில் அனைவரையும் ஏற்றுக்கொள்ளவும், வாழ்வாதாரங்களை வழங்கவுமான சூழல்கள் குறித்து மீண்டும் நம் சிந்திக்க வேண்டுமென அழைப்புவிடுக்கும் யுனெஸ்கோ நிறுவனம், மனித மாண்பு மற்றும் இணக்கவாழ்வில் மெய்யியலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.
அனைத்தையும் உள்ளடக்கிய சமூகங்கள், ஆதாரமுடைய பூமிகோள் என்பது இவ்வாண்டின் உலக மெய்யியல் நாளின் தலைப்பாகும்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.