2013-11-21 15:40:44

கொட்டை பருப்புகளை சாப்பிட்டால் ஆயுள் அதிகம்


நவ.,21,2013. பாதாம், வால்நட் போன்ற கொட்டை பருப்புகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்று நோயால் இறக்க நேரிடும் ஆபத்தை பெருமளவு குறைப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
எவ்வளவுக்கெவ்வளவு கொட்டைப் பருப்புகளைச் சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று "நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில்" வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவில் 30 ஆண்டு கால அளவில் ஏறத்தாழ 1 இலட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்துள்ளன.
தினமும் ஒரு கையளவு கொட்டைப் பருப்புகளைச் சாப்பிடுவதால், எந்த ஒரு காரணத்தாலும் இறப்பதை, 20 விழுக்காடு என்ற அளவில் குறைக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.
கொட்டைப் பருப்புகளை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சராசரியாக சற்று கூடுதலாக உடல் நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.