2013-11-20 16:01:29

நச்சுக்கலந்த கழிவுப்பொருள்கள் உலக அளவில் பெரும் அச்சுறுத்தல்


நவ.20,2013. நச்சுக்கலந்த கழிவுப்பொருள்களால் உலகில் 20 கோடிக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஐ.நா.வெளியிட்ட ஒரு புதிய அறிக்கை எச்சரிக்கின்றது.
49 நாடுகளுக்கு மேற்பட்ட மூவாயிரத்துக்கு அதிகமான இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், நச்சுக்கலந்த கழிவுப்பொருள்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மலேரியா, காசநோய் போன்ற நலவாழ்வு அச்சுறுத்தல்களை முன்வைக்கின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவின் Agbobloshie எலெக்ட்ரானிக் கழிவுப்பொருள்கள் குப்பைமேடு பகுதியின் நிலத்தில் மிகுந்த அளவு ஈயம் கலந்திருப்பதாகவும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்கேடு அப்பகுதியின் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் நலவாழ்வுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
உலகின் பத்து முக்கிய எலெக்ட்ரானிக் கழிவுப்பொருள்கள் குப்பைமேடுகளில் ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் மூன்று முக்கிய இடங்களையும், இலத்தீன் அமெரிக்காவில் ஓர் இடத்தையும் பெரும் ஆபத்தான இடங்களாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.