2013-11-20 16:00:09

சிறார் சுறுசுறுப்பான செயல்களில் ஈடுபடுமாறு வல்லுனர்கள் அழைப்பு


நவ.20,2013. தங்கள் பெற்றோர் தங்களது வயதில் இருக்கும்போது ஓடிய அளவுக்கு ஓட முடியாமல் பல சிறார் உள்ளனர் என்று சொல்லி, ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணிநேரமாவது சுறுசுறுப்பான செயல்களில் ஈடுபடுமாறு சிறாருக்கு அழைப்பு விடுத்துள்ளனர் வல்லுனர்கள்.
28 நாடுகளில் 2 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாரிடம் ஆய்வு நடத்தி அமெரிக்க இதயக் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ள வல்லுனர்கள், ஒரு மைல் தூரத்தைக் கடப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்குமுன் சிறாரின் பெற்றோர் எடுத்த நேரத்தைவிட தற்போது அவர்கள் 90 வினாடிகள் குறைவாகவே எடுக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
சிறாரின் உடல்தகுதியின் தற்போதைய நிலை, அவர்கள் எதிர்காலத்தில் இதய நோயால் பாதிக்கப்படும் ஆபத்தை முன்வைப்பதாக, இந்த ஆய்வை நடத்திய குழுவின் தலைவர் மருத்துவர் Grant Tomkinson எச்சரித்துள்ளார்.
இந்தப் பிரச்சனை பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளிலும், தென் கொரியா, சீனா, ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளிலும் காணப்படுவதாக மருத்துவர் Tomkinson மேலும் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் பள்ளி மாணவர்களில், 58 விழுக்காட்டினருக்கு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.