2013-11-19 15:29:56

மத்திய கிழக்கில் சிறுபான்மை சமயங்களின் உறுப்பினர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர்


நவ.19,2013. உலகில், குறிப்பாக, மத்திய கிழக்கில், சிறுபான்மை சமயச் சமூகங்களின் உறுப்பினர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர் என, சமய சுதந்திரம் குறித்த வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
கிறிஸ்தவராய் இருப்பதால் அவரின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இடங்கள் இன்றைய உலகில் உள்ளன எனவும், ஒவ்வொரு கண்டத்திலும் பாகுபாடு, ஒதுக்கி வைக்கப்படல், நாடு கடத்தப்படல், சித்ரவதை, ஏன் கொலைகளைக்கூட கிறிஸ்தவர்கள் எதிர்நோக்குகின்றனர் என, The Daily Telegraph நாளிதழில் Sayeeda Warsi என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரித்தானிய நாளிதழில் கட்டுரை எழுதியுள்ள Warsi, கிறிஸ்தவ சமயத்துக்கு மையமான இடங்களிலிருந்து அம்மதமே வெளியேற்றப்பட்டு வருகிறது எனவும் எச்சரித்துள்ளார்.
எடுத்துக்காட்டாக, ஈராக்கில் 1990ம் ஆண்டில் 12 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 2 இலட்சமாகக் குறைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.