2013-11-18 16:26:13

இலங்கை மீது தொடர்ந்து அழுத்தம் தேவை: Amn. Int. மனித உரிமைகள் அவை


நவ.,18,2013. இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தொடர்ந்தும் அக்கறை காட்டவேண்டுமானால் அனைத்துலக சமூகம் இலங்கையின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று Amn. Int. எனும் பன்னாட்டு மனித உரிமைகள் அவை கோரியுள்ளது.
இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது ஒரு சவாலாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட Amn. Int. எனும் மனித உரிமைகள் அவையின் அதிகாரி ஸ்டீவ் க்ரௌசோ, இலங்கையில் மனித உரிமைமீறல் சம்பவங்கள் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது அங்கு பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தியது ஏற்றுக்கொள்ளதக்க செயலல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்துலக சமூகம் இலங்கையின் மீது அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுக்கும்போதே, போர்க்குற்றம் உட்பட்ட பல விடயங்களுக்கு, தீர்வுகளை எட்டமுடியும் என்று Amn. Int. எனும் மனித உரிமைகள் அவையின் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.