2013-11-16 15:15:20

ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செப நாளைக் கடைப்பிடிக்க மனிலா கர்தினால் வேண்டுகோள்


நவ.16,2103. பிலிப்பீன்சில் ஹையான் கடும் சூறாவளிப் புயல்காற்றில் இறந்தவர்களால் துயருறும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, செபம் மற்றும் உண்ணாநோன்பு நாளைக் கடைப்பிடிக்குமாறு மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது மனிலா உயர்மறைமாவட்ட குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர்க்கென கர்தினால் தாக்லே அவர்கள் விடுத்துள்ள செய்தியில், இந்த இயற்கைப் பேரிடரின் பின்விளைவுகளால் துன்புறும் மக்களுடன் ஒன்றித்திருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, தபம், செபம் மற்றும் உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்கும் துக்கம் மற்றும் நம்பிக்கை நாளை அனுசரிக்குமாறு கேட்டுள்ளார்.
மனிலா கர்தினாலின் வேண்டுகோளின்பேரில் அவ்வுயர்மறைமாவட்டத்தில் இச்சனிக்கிழமையன்று செபம் மற்றும் உண்ணாநோன்பு கடைப்பிடிக்கப்பட்டது.
மேலும், பிலிப்பீன்சில், இம்மாதம் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை நாடு தழுவிய நவநாள் செபங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிலிப்பீன்சில் ஹையான் புயலில் ஏறக்குறைய இருபது இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என ஐ.நா. கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.