2013-11-15 15:28:14

இந்தோனேசியாவில் போதைப்பொருளுக்கு அடிமையாகிருப்போருக்கு ஆயர்கள் உதவி


நவ.15,2013. இந்தோனேசியாவில் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக இவற்றைப் பயன்படுத்தும் இளையோர்க்குத் தேவையான உடல் மற்றும் ஆன்மீக உதவிகளைச் செய்வதற்கு அந்நாட்டு ஆயர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஜகார்த்தாவில் ஆயர்கள் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில், முதல் முறையாக, அந்நாட்டில் போதைப்பொருள்களின் பாதிப்பு குறித்து ஆயர்கள் மிக ஆழமாக விவாதித்தனர்.
இந்தோனேசியாவில் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் மக்கள், குறிப்பாக இளையோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விவாதித்த ஆயர்கள், அவ்விளையோருக்கு உதவும் வழிகள் குறித்தும் ஆராய்ந்தனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய இந்தோனேசிய ஆயர் பேரவைத் தலைவரான Palembang பேராயர் Aloysius Sudarso, இந்த நவீன சமூகத்தில் பயங்கரமான சமூக நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு ஆயர்களாகிய நாம் உதவுவதற்கு ஒழுக்கரீதிக் கடமையைக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.
இந்தோனேசியாவில் 49 இலட்சம் பேர் போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உயர்மட்ட வகுப்பினராவார்கள்.
உலகிலே அதிகமான முஸ்லீம்களைப் கொண்டுள்ள நாடாகிய இந்தோனேசியாவில் கத்தோலிக்கர் ஏறக்குறைய 70 இலட்சமாகும். அதாவது மொத்த மக்கள்தொகையில் இவர்கள் 3 விழுக்காடாகும்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.