2013-11-13 15:10:59

நிக்கராகுவா அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குகொள்ள கத்தோலிக்கத் திருஅவைக்கு அழைப்பு


நவ.13,2013. மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவின் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்த ஆலோசனை அவைக் கூட்டத்தில் அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை பங்கு கொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
நிக்கராகுவா நாட்டு மக்களவைச் செயலரும், முதல் உதவித் தலைவருமான Alba Palaciosவிடமிருந்து ஆயர்களுக்கு இந்த அழைப்புக் கடிதம் வந்துள்ளதாக நிருபர் கூட்டத்தில் அறிவித்தார் அந்நாட்டு ஆயர் பேரவைச் செயலர் Silvio José Baez.
நிக்கராகுவாவின் அரசியல் அமைப்பின் 39 எண்களில் மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் இந்த ஆலோசனை அவை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.