2013-11-12 15:48:47

பிலிப்பீன்சில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 1,50,000 டாலர் உதவி


நவ.12,2013. மேலும், பிலிப்பீன்சில் ஹையான் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென ஒரு இலட்சத்து 50 ஆயிரம் டாலரை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்தின் கோர் ஊனும் பிறன்பு அவை வழியாக அனுப்பப்பட்டுள்ள இந்நிதியுதவி, பிலிப்பீன்சில் இப்புயலால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மறைமாவட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய ஹையான் கடும் புயல் மற்றும் பத்து அடி உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகளில் பத்தாயிரம் பேர் வரை இறந்துள்ளனர் எனவும், இவ்வெண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் செய்திகள் கூறுகின்றன.
இன்னும், ஏறக்குறைய ஆறு இலட்சத்து அறுபதாயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் ஏறக்குறைய 98 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த வாரத்தில் ஹையான் பெரும்புயலினால் தாக்கப்பட்டு கடும் சேதங்களை எதிர்கொண்ட பிலிப்பைன்ஸின் டக்லோபான் நகர் மீண்டும் கடும் புயற்காற்றுத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது என இச்செவ்வாய் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.