2013-11-11 15:30:06

கொழும்புவில் நடைபெறவுள்ள கான்வெல்த் நாடுகளின் கூட்டத்தை காமன்வெல்த் தலைவர்கள் புறக்கணிக்கவேண்டும், பேராயர் டுட்டு வேண்டுகோள்


நவ.11,2013. இலங்கைத் தலைநகரில் இவ்வாரம் இடம்பெறவுள்ள கான்வெல்த் நாடுகளின் கூட்டத்தை காமன்வெல்த் தலைவர்கள் புறக்கணிக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் நொபெல் அமைதி விருது பெற்ற ஆங்லிக்கன் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு.
கட்டாயமாக மக்கள் கடத்தப்படல், தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள், பத்திரிகை சுதந்திரம் மீதான அடக்குமுறை போன்றவை குறித்து விசாரிக்க இலங்கை அரசையும் அரசுத்தலைவரையும் நிர்ப்பந்திக்க இத்தகைய புறக்கணிப்புகள் உதவும் எனக்கூறியுள்ளார் தென்னாப்ரிக்கப் பேராயர் டுட்டு.
ஏற்கனவே, கானடா பிரதமரும், பாரதப் பிரதமரும் இம்மாநாட்டில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.