2013-11-06 15:20:50

தென்னாப்ரிக்காவின் செல்வந்தர்-ஏழை இடைவெளி, நாட்டின் வளர்ச்சிக்குத் தடை, பேராயர் டுட்டு எச்சரிக்கை


நவ.06,2013. தென்னாப்ரிக்காவில் விரிவடைந்துவரும் செல்வந்தர்-ஏழை இடைவெளி சரிசெய்யப்படாவிட்டால், அந்நாடு அடைந்துவரும் வளர்ச்சி தடை செய்யப்படும் என எச்சரித்துள்ளார் நொபெல் அமைதி விருது பெற்றவரான ஆங்லிக்கன் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு.
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இச்செவ்வாய் மாலை எல்.சி.ஜெயின் நினைவு சொற்பொழிவை துவக்கிவைத்து ஆற்றிய உரையில், தென்னாப்ரிக்காவில் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி பெரிதாகி வருகிறது, இது ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் நல்லதல்ல என்று கூறினார்.
எல்.சி.ஜெயின் போன்ற மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கு உழைத்தவர்களைப் பாராட்டும் விதமாக பேராயர் டுட்டுவின் இடம்பெற்றது.
ஏழைகள் மாண்புடன் நடத்தப்படவும், தங்கள் முன்னேற்றத்துக்கு உதவும் மனிதர்களோடு அவர்கள் ஒத்துழைக்க விரும்புவதாகவும், தாங்கள் பரிதாபமாக நோக்கப்படுவதற்கு ஏழைகள் விரும்பவில்லையெனவும் கூறினார் பேராயர் டுட்டு.
எல்.சி.ஜெயின் ஒரு காந்தியவாதி மற்றும் சுதந்திரப் போராட்டக்காரர். 1994ம் ஆண்டில் தென்னாப்ரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு முடிவடைந்த பின்னர் அந்நாட்டுக்கான இந்தியாவின் முதல் தூதரக அதிகாரியாக, இவர் பணியாற்றியவர்.

ஆதாரம் : IANS







All the contents on this site are copyrighted ©.