2013-11-05 15:24:17

தொழிலாளருக்கு நீதி வழங்கப்படுமாறு CBCI தொழில் பணிக்குழு வலியுறுத்தல்


நவ.05,2013. ஒரு நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் மாண்புநிறைந்த வேலை செய்வதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என்று இந்திய ஆயர் பேரவையின் தொழில் பணிக்குழு அறிவித்துள்ளது.
இந்திய ஆயர் பேரவையின் தொழில் பணிக்குழு அண்மையில் புதுடெல்லியில் நடத்திய தேசிய மாநாட்டின் இறுதியில் அப்பணிக்குழுத் தலைவர் ஆயர் Oswald Lewis, Faridabad பேராயர் Kuriakose Bhranikulankara ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் அனைத்துக் குடிமக்களும் மாண்புடன்கூடிய வேலை செய்வதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டில் நடைபெற்ற 86வது அனைத்துலக தொழில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தொழில் குறித்த அடிப்படை கோட்பாடுகளையும் உரிமைகளையும் சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, அனைத்துலக தொழில் நிறுவனத்தின் உறுப்பினர்கள் இக்கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டிய கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், புதுடெல்லியில் அமைப்புமுறை சாராத் தொழிலாளர்களுக்கு நீதி வழங்கப்படுமாறும் இந்திய ஆயர் பேரவையின் தொழில் பணிக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : CBCI







All the contents on this site are copyrighted ©.